20க்கு மேற்பட்டோரைக் குரங்கு கடித்ததால் தற்காலிகமாக ஊரைக் காலிசெய்த பொதுமக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் கன்னிக்கோயில் தெருவில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர்.
ஒரு மாதத்துக்கு முன்பு அந்த ஊருக்குள் புகுந்த ஆண் குரங்கு ஒன்று வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களைத் தின்று வந்தது. 
குரங்கை விரட்டியவர்களை அது திருப்பித் தாக்கத் தொடங் கியதுடன்  இருபதுக்கு மேற்பட் டவர்களைக் கடித்தது. மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள், நாய்கள் போன்றவற்றையும் அது கடிக்கத் தொடங்கியது. 
பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சீர்காழி வனத்துறை அதிகாரிகள் குரங்கைப் பிடிக்க மூன்று முறை கூண்டுகள் அமைத்தனர். சில இடங்களில் வலைகளையும் விரித்தனர். குரங்கு அவற்றில் சிக்கவில்லை. 
சில நாட்களுக்கு முன்பு அந்தக் குரங்கு 70 வயது மதிக்கத் தக்க மூதாட்டியைக் கடித்ததில் அவர் சுயநினைவற்று மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது.
தனது கூட்டத்தை விட்டு தனியாக வந்ததாலோ அல்லது அதனுடைய உடலில் இருக்கும் காயங்கள் காரணமாகவோ அது உக்கிரமாக நடந்துகொள்ளக் கூடும் என வனவிலங்கு நல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரங்கைச் சமாளிக்க முடியாத கிராமத்தார், தங்களது உடைமை கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, வீடுகளைப் பூட்டிவிட்டு அந்த கிராம எல்லையில் இருக்கும் கோயில் ஒன்றில் தஞ்சம் புகுந்து உள்ளனர். குரங்கைப் பிடித்த பிறகே அவர்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்புகின்றனர். ஓரிரு தினங்களில் குரங்கைப் பிடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்