‘ராகுல் திட்டத்தினால் பாஜகவுக்கு பயம்’

ஆலந்தூர்: சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமி ழக காங்கிரஸ் கட்சித்  தலைவர் திருநாவுக்கரசர், “நான்கரை ஆண்டுகளாக எதுவுமே செய் யாத பாரதிய ஜனதா கட்சி ராகுல்காந்தி அறிவித்த திட் டத்தைக் கண்டு அஞ்சுகிறது,” என்றார்.
“ராகுல் திட்டத்தை நிறை வேற்ற முடியாது என்ற அவ நம்பிக்கையை மக்களிடத்தில் பரப்ப அவர்கள் நினைக்கின்றனர். தமிழகத்தில் நிறைய மாவட் டங்களில் வறட்சி நிலவுகிறது. மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக முன்எச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். தற்போது உள்ள மத்திய அரசு முழு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை போட முடியாது. பொய்யான தவறான வாக்குறுதி களை வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கக்கூடாது.
“மூன்று  மாநிலங்களில் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அங்கு விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது. சாதாரண மக் களின் குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டமும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்,” என்று திரு நாவுக்கரசர் கூறினார்.

Loading...
Load next