ஒன்றையொன்று அச்சுறுத்தும் பாஜக, அதிமுக: துரைமுருகன்

வேலூர்: வேலூர் சேண்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. 
இதனால் பாதிக்கப்பட்ட மக் களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் திமுகவின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “தமிழக அரசை ஆளுபவர்கள் ஒப்பந்தக் குத்தகை வழங்குவதிலும் வசூ லிப்பதிலும் குறியாக உள்ளனர்,” என்றார்.
“ஆனால் கர்நாடக முதல்வர் குமாரசாமியோ பத்திரிகையாளர் களைச் சந்தித்து மேகதாது விவ காரம் குறித்து விளக்கவுள்  ளார்.
“அரசு ஊழியர்களை பொறுத்தவரை தமிழக அரசு நீக்குபோக்குடன் செயல்பட வேண்டும். அதிகாரம் உள்ளது என்பதால் அரசு ஊழியர் களை இடைநீக்கம் செய்தால் அரசு நிர்வாகம் நின்றுவிடும். அமைச்சர்கள் இல்லை என் றாலும் அரசு ஊழியர்கள் இருந் தால் ஆட்சி நடக்கும். தற்போது இவர்கள் செய்த செயலுக்கு பலன் நேரில் தெரியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“அதிமுக சார்பில் 40 நாடாளு மன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுவை வாங்குகிறார்கள். மத்திய அரசை பயமுறுத்தவே இதனை செய்கின்றனர். மத்திய அரசும் தமிழக அரசை பய முறுத்துகிறது. இது இருவருக் கும் இடையே நடக்கும் மௌன யுத்தமாகும்,” என்று துரை முருகன் கூறினார்.