திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தல்

திருச்சி: திருச்சி வந்த விமானத் தில் ரூ. 6.41 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சி வரும் விமானங்களில் தங்கம் கடத்தப் படுவதாக சுங்கத் துறை யினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானத்தி லிருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
ஒரு பயணி சந்தேகத்துடன் காணப்பட்டார். இதனால் அந்தப் பயணியை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை யிட்டனர்.
அப்போது அவர் 24 கேரட் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் மதிப்பு ரூ. 6.41 லட்சம் ஆகும்.
இந்தத் தங்கம் யாருக்குச் சொந்தம், யாருக்காகக் கடத்தப் பட்டது என்பது குறித்து வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.