ஈரோடு சந்தையில் மாடு விற்பனை அமோகம்

1 mins read
bfe4ac6a-8c66-4c8d-9190-66e4da736add
மாட்டுச் சந்தையில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள மாடுகள் விற்கப்பட்டன. படம்: தமிழக ஊடகம் -

ஈரோடு: ஈரோடு மாட்டுச் சந்தை யில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. பசுக்கள் 10,000 முதல் 32,000 ரூபாய் வரையில் விற்கப்பட்டன. கன்றுகள் ஒவ்வொன்றும் 12,000 ரூபாய்க்கு விற்கப்பட்டன. எருமைகள் 14,000 முதல் 40,000 ரூபாய் வரை விற்பனை யாயின. இந்தச் சந்தையிலிருந்து தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் விவசாயிகளும் மாடுகளை வாங்கிச் சென்றனர். இது குறித்து விளக்கம் அளித்த மாட்டுச் சந்தை நிர்வாகி, "ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பபட்டன. இதில் 80 விழுக்காடு மாடுகள் மூன்று கோடி ரூபாய் மதிப்புக்கு விற்பனை யாகின," என்றார். இதே ஈரோட்டில் புன்செய்புளியம் பட்டியில் நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 20 எருமைகள், 150 கலப்பின மாடுகள், 80 கன்றுகள், 250 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்டன. இங்கு ஆடு, மாடு உள்பட கால்நடைகள் 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.