சென்னை: சிறுத்தைக்குட்டியை கடத்தி வந்த விமானப் பயணி

தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் சிறுத்தைக்குட்டியை கடத்தி வந்த ஆடவர் ஒரு வரை சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 
தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் வனவிலங்குகள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகள் வருகைக் கூடத்தில் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்றுக் காலை யில் பயணிகள் வருகைக் கூடத்தில் ஆடவர் ஒருவரின் நடமாட்டம் அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தமது பயணப் பையைச் சேகரித்ததும் அவர் விமான நிலையத்தைவிட்டு விரைவாக வெளியேற முயன்றது அவர் மீதான சந்தேகத்தை உறுதி செய்தது.
அத்துடன், அவரது பயணப் பையில் இருந்து மெல்லிய முனகல் சத்தம் வந்ததையும் அதிகாரிகள் கேட்டனர். உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்த அதிகாரிகள், அவரது பயணப்பையையும் சோத னையிட்டனர். அப்போது, அதில் இளஞ்சிவப்பு நிறக் கூடை ஒன்றில் சிறுத்தைக்குட்டி மறைத்து வைக் கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு