நிர்மலாதேவிக்கு திடீர் சிகிச்சை

மதுரை: மாணவிகளுடன் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தமக்கு கடும் முதுகுவலி இருப்பதாக கூறியதை அடுத்து அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.