மதுக்கடைகள் மூடப்படும் என உதயநிதி வாக்குறுதி

தேனி: முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத் தில் இருக்கும் மர்மத்தையே கண்டுபிடிக்க முடியாத அதிமுக அரசு, மக்களைப் பற்றி எங்கே சிந்திக்கப் போகிறது என உதயநிதி ஸ்டாலின் கேட்டுள்ளார்.
ஆண்டிபட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்து திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றார்.
“தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப் போது பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக் கும் தீர்வு காணப்படும். 
“டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும். சாலை, குடிநீர் வசதி நிறை வேற்றப்படும். குன்னூர் முல்லை பெரியாற்றில் இருந்து சக்கிலிச்சி அம்மன் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் உதயநிதி.

Loading...
Load next