அன்னப்பறவை ஆன அதிமுக: அமைச்சர் பேச்சு

சென்னை: மத்திய அரசு நல்லது செய்தால் வரவேற்பு, மாநில நலனுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வந்தால் எதிர்ப்பு என ஓர் அன்னப்பறவையைப் போல் அதிமுக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள் என்றால் அவை வேரோடு வேராக அறுத்து எறியப்படும் என்றார். 
திமுக ஓர் ஒட்டுண்ணிக் கட்சி என்று விமர்சித்த அமைச்சர், பசை இருக்கும் இடத்தில் மட்டுமே திமுக வினர் ஒட்டிக்கொள்வர் என்றார். 
தமிழகத்துக்கு யார் நல் லது செய்வார்கள் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் கூட்டணி அமையும் என் றும், யார் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகதான் தலைமை வகிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
“அதிமுக அரசும் கட்சியும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது மட்டுமே டிடிவி தினகரனின் ஒரே எண்ணம். அவரது உடலில் அதிமுக ரத்தம் ஓடாததால் தேவையில்லாத கருத்துகளை எல்லாம் அவர் தெரிவித்து வருகிறார். அத்தகைய கருத்துகள் எல் லாம் கானல் நீர் போன்றவை,” என்றார் ஜெயகுமார்.