பொள்ளாச்சி அருகே பந்தயம்:  400 ரேக்ளா வண்டிகள் பங்கேற்பு

பொள்ளாச்சி: ரேக்ளா பந்தயத்தில் 400க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்ற நிகழ்வு பொள்ளாச்சி மக்களை உற்சாகத் தில் ஆழ்த்தியுள்ளது. 
ஜல்லிக்கட்டு போலவே ரேக்ளா பந்தயத்துக்கும் நல்ல வர வேற்பு கிடைக்கும். ஆண்டு தோறும் பல்வேறு பகுதிகளில் ரேக்ளா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காங்கேயம் இனக் காளைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், விவசாயத்தில்  நாட்டு மாடுகளின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்தும் வித மாகவும் நேற்று முன்தினம் குளத்துப்பாளையம் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. 
இதைக் காண சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் குளத்துப்பாளை யத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது.
400க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்ற நிலையில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர் களை வெகுவாக உற்சாகப்படுத்தி யது. பொதுமக்கள் தொடர்ந்து கைதட்டி காளைகளை உற்சாகப் படுத்தினர்.