ஆட்சியைக் கவிழ்க்க திமுக சதி செய்வதாக முதல்வர் புகார்

சேலம்: தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் மக்களுக்குத் தேவையான வேறு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் கலந்துகொண்டு பேசிய அவர், காலஞ்சென்ற எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காகப் பல் வேறு திட்டங்களை நிறைவேற்றி னர் எனப் புகழ்ந்துரைத்தார். அவ்விரு தலைவர்களின் மறைவைத் தொடர்ந்து நடப்பு அதிமுக அரசும் மக்கள் நலனுக் காக பல்வேறு திட்டங்களை அறி வித்துச் செயல்படுத்தி வருவதாக வும், கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசு மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதா கவும் அவர் கூறினார். “மு.க. ஸ்டாலின் ஒரு பஞ்சா யத்தில் உட்கார்ந்துகொண்டு இந்த ஆட்சி குறித்து விமர்சனம் செய்கிறார். அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டைக் கூறிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் என்னென்ன திட்டங் கள் அறிவிக்கப்பட்டனவோ நடை முறைப்படுத்தப்பட்டனவோ அந்தத் திட்டங்களை நடப்பு அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி மக்கள் வரவேற்பைப் பெற்றுள் ளது,” என்றார் முதல்வர் பழனிசாமி.