சோதனையில் சிக்கிய 4.5 டன் பிளாஸ்டிக்

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட், சிந்தா திரிப்பேட்டை மற்றும் காசிமேடு மீன் சந்தை ஆகிய பகுதி களில் சென்னை மாநகராட்சி யின் சுகாதாரத்துறை அதிகாரி கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 2,898 கடைகளில் அதிகாரி கள் மேற்கொண்ட சோதனை யில் சுமார் 4.5 டன் பிளாஸ் டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் கம்பெனிக்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில பிளாஸ்டிக் பொருட்கள் குத்தகைதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்