தமிழை வளர்க்க ரூ.200 கோடி

வாணியம்பாடி: தாய்மொழியான தமிழ்மொழியை வளர்க்க ரூ.200 கோடியில் திட்டம் துவங்கப்பட உள்ளதாக தமிழ்மொழி கலாசாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச் சர் பாண்டியராஜன் தெரிவித்துள் ளார். வேலூர் மாவட்டம் வாணி யம்பாடியில் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் பங் கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் தமிழின் பெருமைகளை விளக்கிப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மெல்லதமிழ் இனி வெல்லும் என்ற தலைப்பில் தமிழின் பெருமைகள் குறித்து பேசினேன். தமிழை வளர்க்கும் நோக்குடன் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து முத்தமிழ் மன்றத்தினர் இந்த விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். “அரியலூர் உட்பட தமிழ கத்தின் நான்கு இடங்களில் உலகத்தரம் வாய்ந்த தமிழ் அருங் காட்சியகங்கள் விரைவில் உரு வாக்கப்படவுள்ளன.

“தமிழர்களை ஒருங்கிணைத்து மேலும் தமிழை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. “யுனெஸ்கோ உலக நிறுவனம் ‘மண்ணின் மொழி’ என்ற பெரு மையை தமிழ்மொழிக்குச் சூட்டி யுள்ளது. “தமிழ் சொற்குவை என்ற தலைப்பிலான திட்டம் ஒன்று தமிழ் குறித்தும் தமிழ் வார்த் தைகள் குறித்தும் சந்தேகங்களை போக்கிக்கொள்ளவும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் அறிந்து கொள்ளவும் பயன்படும். “மேலும் இதே நோக்கத்திற்காக தமிழறிஞர்களைக் கொண்டு ‘கால் செண்டர்’கள் அமைக்கப்பட வுள்ளன. “மேலும் தமிழ் மொழிக்காக 11 வளர்ச்சித் திட்டங்களும் செயல் படுத்தப்பட உள்ளன,” என அமைச்சர் பாண்டியராஜன் கூறி னார்.

Loading...
Load next