மனைவியைக் கொன்று  கை, கால்களை வெட்டி குப்பையில் வீசிய இயக்குநர்

திரைப்பட உதவி இயக்குநரான எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் மனைவி சந்தியாவைக் கொன்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளார். 
சென்னை அருகே பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஜனவரி 20ஆம் தேதி பெண்ணின் கை, கால்கள் பார்சல் செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொட்டப்பட்ட குப்பை கோடம் பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்தனர். 
கோடம்பாக்கம் பகுதியில் காணாமல்போன பெண்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்த தில் அப்பகுதியில் சந்தியா என்ற பெண் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு, கொலையுண்ட பெண் தூத்துக் குடியைச் சேர்ந்த சந்தியா என்பது உறுதியானது. 
அதைத் தொடர்ந்து அவரது கணவர் பாலகிருஷ்ணனை போலிசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் மனைவி சந்தியாவைக் கொன்றதை பால கிருஷ்ணன் ஒப்புக்கொண்டார்.  சந்தியா பொங்கலுக்கு சென்னை வந்தபோது மீண்டும் குடும்பப் பிரச்சினை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதில் கடந்த 20ஆம் தேதி இரவு மனைவியை அவர் கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டி கை, கால்களை குப்பை மேட்டில் வீசியுள்ளார்.
பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் ஈக்காடுதாங்கல் பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றின் கரையோரம்  சந்தியாவின் இடுப்பு முதல் முழங்கால் வரையிலான பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. 
ஆனால், இதுவரை சந்தியா வின் தலை உட்பட உடலின் மற்ற பாகங்கள் கிடைக்கவில்லை. தேடும் பணியில் போலிசார் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்