திருநாவுக்கரசர், ரஜினி, திருமாவளவன் சந்திப்பால் அரசியல் களத்தில் புது பரபரப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் நடிகர் ரஜினியும் மீண்டும் சந்தித்துப் பேசியது தமிழக அரசியல் களத்தில் புதுப்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ரஜினி தனது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக் கான அழைப்பிதழை அளிக்கவே திருநாவுக்கரசரின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்பட்டாலும், அங்கு அரசியல் குறித்துப் பேசப் பட்டது உண்மைதான் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
நேற்று காலை திருநாவுக்கரசர் வீட்டுக்கு ரஜினி சென்றிருந்தபோது அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இருந்தது மேலும் பல ஆரூடங்க ளுக்கு வழிவகுத்துள்ளது. 
ரஜினி கிளம்பிச் சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு நாவுக்கரசர், இருவரும் நாட்டு நடப்புகள், பொதுவான அரசியல் சூழ்நிலைகள் குறித்துப் பேசிக் கொண்டதாகத் தெரிவித்தார். “கட்சி தொடங்காவிட்டாலும் கூட ரஜினியும் அரசியல் தலைவர்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம் முதலே ரஜினி அரசியல் பேசி வருகிறார். அவருடன் பேசிய தில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்று மில்லை,” என்றார் திருநாவுக்கரசர். 
ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்று எழுப்பப்பட்ட கேள் விக்கு, “இதுகுறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்,” என்றார் திருநாவுக்கரசர்.
 

Loading...
Load next