கீழடி ஆய்வு தொடர வேண்டும்

சிவகங்கை: திமுக ஆட்சி அமைந்தவுடன் கீழடிப் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நேற்று முன்தினம் கீழடியில் தொல்லியல் ஆய்வு நடக்கும் பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஏற்கெனவே 4 கட்டங்க ளாகத் தொல்லியல் ஆய்வு நடந்துள்ளது. 
ஆய்வுப் பகுதியைப் பார் வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடன் அவர் சில நிமிடங்கள் பேசினார். 
இதையடுத்துச் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசால் திட்டமிட்டுத் தொல்லியல் ஆய்வுப் பணிகள் புறக் கணிக்கப்படுவதாகக் கீழடி மக்கள் தம்மிடம் வேதனை யுடன் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
“இங்கு ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. இங்கு தொடர்ந்து விரிவான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். 
“இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் கீழடியில் நிச்சயம் அருங்காட்சியம் அமைக்கப்படும்,” என்றார் மு.க. ஸ்டாலின். 
இதற்கிடையே கீழடியில் மு.க. ஸ்டாலினைக் கண்ட தனியார் பள்ளி மாணவர்கள் உற்சாக மிகுதியில் குரல் எழுப்பினர். இதைப் பார்த்த மு.க. ஸ்டாலினும் உற்சாகமடைந்து தனது காரில் இருந்து இறங்கிச் சென்று சிறுவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்.
 

Loading...
Load next