கூட்டணி முடிவாகவில்லை என்கிறார் அன்புமணி

தர்மபுரி: குறிப்பிட்ட சில கட்சி களுடன் பாமக கூட்டணி சேர வேண்டும் என்ற சிலரது விருப்பம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தர்மபுரியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது என்பது குறித்து பாமக தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். 
கூட்டணி குறித்து முடிவெ டுத்து விட்டதாகப் பல்வேறு ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் அனைத்துமே வெறும் யூகம்தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 
கூட்டணி குறித்துக் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்