சென்னை: நடைபாதையில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கு வீடு

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபாதைகளில் வசிக்கும் ஏறத் தாழ 2,000 குடும்பங்கள் நிரந்தரமாக சொந்த வீடுகளுக்கு இடம் பெயரவுள்ளன. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அவர்களுக்கு வீடுகளைக் கட்டித்தரவுள்ளது.
இதுவரை சேரிகளில் வசிக் கும் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது நடைபாதைகளில் வசிக் கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.
சென்னையில் பெரும்பாக்கம், திருவொற்றியூர், மூலக்கொத்தளம் உட்பட 40 பகுதிகளில் அந்த வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
"கட்டுமானப் பணிகள் முடிந்து, எல்லா வசதிகளும் ஏற்படுத்தப் பட்டபின் அந்தக் குடும்பங்கள் புதிய வீடுகளில் குடியமர்த்தப் படும்," என்று குடிசை மாற்று வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
நகராட்சி அதிகாரிகள் மேற் கொண்ட கணக்கெடுப்பின்மூலம் அந்தக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. தியாகராய நகர், எழும்பூர், சேப்பாக்கம், கோயம்பேடு, சூளை, வால் டாக்ஸ் ரோடு, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல குடும்பங்கள் நடைபாதைகளில் வசித்து வருகின்றன.
சென்னையில் இப்படி நடைபாதைகளில் வசித்து வரும் குடும்பங்கள் மட்டுமின்றி, சாலை ஓரங்களில் குடிசைகளிலும் சேரிகளிலும் புறம்போக்கு இடங்களிலும் வசித்துவரும் 64,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் வீதிகளில் வசிக்கும் குடும் பங்கள் உட்பட 450,000 குடும்பங் களுக்கு வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 161,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன என்றும் எஞ்சியவை ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவற்றில் கிட்டத்தட்ட 38,000 வீடுகள் சென்னையில் கட்டப்படு கின்றன. இந்தியப் பிரதமரின் 'அனைவருக்கும் வீடு (நகர்ப்புறம்)' திட்டத்தின்கீழ் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
நடைபாதைவாசிகளை நிரந்தரமாக வீடுகளில் குடியமர்த்தவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அதிக காலம் எடுத்துக்கொள்வது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
வீதிகளில் வசித்தோருக்குக் கடைசியாக 1980களின் பிற்பகுதியில் வீடுகள் கட்டித் தரப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!