கூவம் நதிக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூர் வருகிறார். சென்னை யில் புதிய மெட்ரோ ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தப் பாதை, சென்னையில் கூவம் நதிக்கு அடியில் போடப்பட்டு இருக்கிறது.

சிந்தாதிரிப் பேட்டை முதல் சென்ட்ரல் வரை கூவம் அடியில் இது செல்லும். சென் னையில் கூவம் நதிக்குக் கீழ் செல்லும் முதல் ரயில் இது என்பதால் இந்த வழித்தடம் இப்போதே பரபரப்பாகியுள்ளது. பாம்பன் புதிய பாலம், பரமக் குடி-தனுஷ்கோடி நான்கு வழிப் பாதை, ராமேசுவரம்- தனுஷ்கோடி ரயில் பாதை ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். மதுரை- சென்னை அதிவேக தேஜஸ் சொகுசு ரயில் போக்கு வரத்தை திரு மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரியின் புதிய கட்ட டத்தை திறந்துவைக்கும் பிரதமர், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் உருவான புதிய முனையம், திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் (புதிய முனையம்) ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் இந்த தமிழக வருகை மிக முக்கியமானதாக இருக்கும் என்று தெரிகிறது.

Loading...
Load next