சீமான்: 40 தொகுதிகளிலும் போட்டி

கும்பகோணம்: மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார். 
மக்களவைத் தேர்தலில் 20 ஆண் வேட்பாளர்களையும் 20 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தவிருப்பதாக தெரிவித்த சீமான், தமிழ் தேசிய பேரியக்கத்துடன் கூட்டணியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.