மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்

சென்னை: நடிகர் சிவக்குமார், திருமண நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ள முயன்ற ஒருவரின் கைத்தொலைபேசியைத் தட்டிவிடும் காட்சி இப்போது இணையத்தில் பரபரப்பாக வலம் வருகிறது. இந்தச் சம்பவம் சென்னையில் ஒரு திருமண விழாவில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. நடிகர் சிவக்குமார் கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்குச் சென்றபோது ‘செல்பி’ எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் கைத்தொலைபேசியை தட்டிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த நபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய கைத்தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.