மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

கோவை: மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும். திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று கோவை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
  “எங்கள் கையில் கறை படிந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.