ஒரே எண் கொண்ட ‘பான்’ அட்டைகள்

திருச்சி கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கீழவாளாடியைச் சேர்ந்த வேறு ஒரு செந்தில்குமார் இருவரது ‘பான்’ அட்டையின் எண்களும் ஒரே மாதிரியாக இருந்தது வங்கியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இது பற்றி வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட இருவரும் முடிவு செய்துள்ளனர். ஒரே எண்ணில் இரண்டு ‘பான்’ அட்டைகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.