வரித்துறை: 4 நிறுவனங்கள் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் செயல் படும் நான்கு பெரிய நிறுவனங்கள் ரூ. 433 கோடி வரி ஏய்ப்பு செய் துள்ளதாக தெரியவந்து இருக்கி றது என்று  வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் போலி சாரும் அடங்கிய 70 பேர் குழுவும் கடந்த ஜனவரி 29 முதல் சென் னையில் நான்கு நிறுவனங்களில் பல நாட்கள் வருமான வரிச் சோதனையை நடத்தியது.
சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்களுக்குச் சொந்தமான 74 இடங்களில் மூன்று நாட்கள் அதிகாரிகள் சோதனையிட்டனர். 
அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் அப் போது தெரிவித்தார்கள். ஆனால் எந்த அளவுக்கு வரி ஏய்ப்பு என்பது பற்றி தெரிவிக்க அவர்கள் அப்போது மறுத்துவிட் டனர். 
சோதனைகள் முடிந்ததும் வரு மான வரித்துறையினர் பல நாட் களாகக் கணக்கிடுதல், மதிப்பிடு தல், ஆய்வு நடத்துதல் ஆகிய நட வடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். 
சோதனைகளின்போது கைப் பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை எல்லாம் மதிப் பிடப்பட்டு கணக்கிடப்பட்டன.