பாஜக, மத்திய அரசை ஒரு கை பார்க்கத் தயாராகும் தம்பிதுரை 

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பதவி வகிக்கும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, மத்திய அரசாங்கத்தையும் பாஜக கட்சியையும் இரண்டில் ஒன்று பார்த்து விடுவதற்குத் தீவிரமாக ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிட லாம் என்ற நோக்கத்தில் அதற்கான வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தப் போக்கு அந்தக் கட்சியின் இதர நாடாளுமன்ற உறுப்பினர் களிடையே பெரிய அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறது. 
மத்திய அரசாங்கம் அண்மையில் தாக்கல் செய்த புதிய வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று தொடங்குகிறது. 
அதில் தம்பிதுரை காரசாரமாக பேசுவார் எனத் தெரிகிறது. 
அண்மைக் காலமாக பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக தம்பிதுரை எதிர்த்து வருகிறார். 
மக்களவை துணை சபாநாயகர் என்றாலும் வரவுசெலவுத் திட்டம் தாக்கலானபோது அவையைத் தம்பிதுரை புறக்கணித்துவிட்டார். 
அதிமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயனும் தம்பிதுரையும் கீரியும் பாம்பும் போல் இருந்து வந்தாலும் இருவரும் புதுடெல்லியில் நாடாளுமன்ற அவையில் இரண்டு மணி நேரம் தனியாகப் பலவற்றையும் விவாதித்து எல்லாரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள். 
தாங்கள் இருவரையும் அதிமுக வும் பாஜகவும் புறக்கணிப்பதாகவும் தங்களை கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொள்வதாகவும் அந்த இருவரும் கருதுகிறார்கள். 
ரபேல் போர் விமானம் பற்றிய விவாதத்தில் தற்காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தம்பிதுரை எதிர்த்தார். 10% இட ஒதுக்கீட்டு விவகாரத்திலும் தம்பிதுரை பாஜகவை சாடினார். 
இந்த நிலையில், வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் தம்பிதுரை உரையாற்று வதற்குத் தோதாக பல குறிப்புகளை யும் ஆயத்தப்படுத்தும் பணியில் தம்பிதுரையின் அலுவலகம் தீவிர மாக ஈடுபட்டு இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. 
அதிமுகவும் பாஜகவும் கூட்டணிக்கு நெருங்கி வரும் நிலையில் தம்பிதுரையின் போக்கு அதிர்ச்சியாக உள்ளது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை