கடலில் ராஜராஜன் சிலை: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் ராஜராஜசோழனுக்குச் சிலை அமைக்கவும் அவரது சமாதி இருக்கும் உடையளூர் கிராமத்தில் மணிமண்டபம் கட்டவும் கோரி தாக்கலான மனுவுக்குத் தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரம் தள்ளிவைத்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் அந்த மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை அரபிக்கடலில் ரூ.4,900 கோடி செலவில் அமைய இருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை ரூ.3,000 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் ராஜராஜ சோழன் சிலை நிறுவப்படவேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.