ரூ.15,000 சில்லறைக்குப் பதில்  உப்பைக் கொடுத்து ஏமாற்றிய ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மளிகைக் கடை நடத்தி வரும் செந்தில் என்பவருக்கு 30,000 ரூபாய்க்குச் சில்லறை இருக்கிறது, வந்து வாங்கிச் செல்லவும் என்று ஓர் அழைப்பு வந்தது.
அந்த அழைப்பு தேசிய வங்கியில் இருந்து வந்ததாக நம்பிய செந்தில், தனது உதவியாளரிடம் 15,000 பணத்தைக் கெடுத்து சில்லறை வாங்கி வரும்படி சொன்னார். வங்கி வெளியே காத்திருந்தவர் செந்திலின் உதவியாளரிடம் சில்லறை மூட்டையைக் கொடுத்துவிட்டு ரூ.15,000 பணத்தைப் பெற்றுக்கொண்டார். 
பின்னர், கடைக்கு வந்து அந்த மூட்டையைப் பிரித்த போது உள்ளே உப்புப் பொட்டலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில் போலிசில் புகார் தெரிவித்தார். சந்தேக நபரை போலிஸ் தேடுகிறது.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்