பேரிடர் பகுதிகளில்  100,000 வீடுகள்  

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று சட்டமன்றத்தில் 2019-20 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு முன்னதா கவே தாக்கலாகி இருக்கும் அந்தத் திட்டத்தில் புதிய வரி, இலவச அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இருந்தாலும் பல துறைகளிலும் ஏராளமான திட்டங்களை, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளுடன் அமைச் சர் அறிவித்தார்.
கஜா புயல் பாதித்த பகுதி களில் ரூ.1,700 கோடி செல வில் 100,000 வீடுகளைக் கட்டு வது, சென்னையில் பரந்த அள விலான வாகன நிறுத்திவைப்பு திட்டங்களை ரூ.2,000 கோடி செலவில் நடைமுறைப்படுத்து வது முதலானவை புதிய பட் ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்தின்படி 2 லட்சம் நான்குசக்கர வாகனங் கள், 2 லட்சம் இருசக்கர வாக னங்கள் நிறுத்தக்கூடிய அள வில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும்.
டாஸ்மாக் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அக்கடைகளின் எண்ணிக்கை மேலும் குறையும் என்றும் புதிய பட்ஜெட் கூறுகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலகத் தர மிக்க நீச்சல்குளம் உருவாக்கப் படும் என்றும் வரும் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்றும் எட்டாவது தடவையாக வரவுசெல வுத் திட்டத்தைத் தாக்கல் செய்த அமைச்சர் அறிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!