ஜெயக்குமார்: இதுவரை கூட்டணி அமையவில்லை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக வும் பாஜகவும் கூட்டணி அமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து அறிவிக் கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 
இதுவரை எந்தக் கட்சியு டனும் கூட்டணி அமைய வில்லை என்றும் செய்தியா ளர்கள் எழுப்பிய கேள் விக்கு அவர் பதிலளித்தார். 
தனித்துப் போட்டியிட வேண்டுமென கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு, அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம் என்றும், கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு மாவட்டச் செயலர்கள் முழு ஒத்து ழைப்பு அளிப்பர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“கூட்டணி குறித்து மாவட்டச் செயலர்களிடம் கருத்துக் கேட்பதற்கான அவசியம் எழவில்லை. கட்சித் தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அனைவரும் கட்டுப் படும்போது விவாதிக்க வேண்டியது இல்லை.
“கூட்டணி குறித்துக் கற்பனையாகவே பல கதை கள் புனையப்படுகின்றன. எந்தக் கட்சி வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். 
“தற்போதுவரை எந்தக் கூட்டணியும் அமைய வில்லை. அமைந்தால் அது மிகப்பெரிய கூட்டணியாக இருக்கும்,” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.