திருச்செந்தூருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் ஏராளமானோர் நேற்று இரணியல் பகுதியில் குவிந் தனர். இன்று அவர்கள் திருச்செந்தூர் செல்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் திருச் செந்தூர் மாசித் திருவிழாவுக்கு இரணியல், திங்கள்நகர், குளச் சல், புதுக்கடை, மணவாளக் குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று பங்கேற்பது வழக்கம். இம்முறையும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் செல்கின்றனர். 
இதற்காக அவர்கள் நேற்று மாலை வரை இரணியல் பகுதியில் குவிந்தனர். நேற்று இரவு அங்கு காவடி பூஜை நடைபெற்றது. இதையடுத்து இன்று காவடி ஊர்வலம் நடைபெற உள்ளது.
காவடி ஊர்வலத்தை ஒட்டி பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. மேலும் திருச் செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்