புது நிர்வாகிகள் நியமனத்தால் திமுகவில் பரபரப்பு; அதிருப்தி

மதுரை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக நிர்வாகிகளை அக்கட்சித் தலைமை அதிரடியாக மாற்றியுள்ளது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஒருவருக்கு அதே தினம் ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே ஆச்சரியத்துடன் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. 
நாடாளுமன்றத் தேர்தலை மன திற்கொண்டு கடந்த சில மாதங் களுக்கு முன்பே திமுகவில் சில அதிரடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அவற்றுள் மாவட்டங்கள், ஒன்றியங்களை இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்துப் புதிய பொறுப்பாளர்களை நியமித்ததும் முக்கிய நடவடிக்கை ஆகும். 
எனினும் மதுரையில் மட்டும் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்நிலையில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக மூன்றாமிடத்தில் இருப்பதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்தது. இதனால் கவலை அடைந்த அக்கட்சித் தலைமை நிர்வாக வசதிக்காக சில மாற்றங்களைச் செய்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் அமமுக பிரமுகர் வேட்டையன் தனது ஆதரவாளர்களுடன் திமுக வில் இணைந்துள்ளார். இதையடுத்து திருப்பரங்குன்றம் ஒன்றியத்தை மூன்றாகப் பிரித்துள்ள திமுக தலைமை, அவற்றுள் தெற்கு ஒன்றியத்திற்குப் பொறுப்பாளராக வேட்டையனை நியமித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலர் மாது.

17 Jun 2019

தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்

தமிழக முதல்வர் பழனிசாமி

17 Jun 2019

3 துணை முதல்வர்கள்: முதல்வரின் புது முடிவு