புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூரில் உள்ள நீலியம் மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இம்முறை 756 காளைகள் களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்க 299 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டித் தள்ளியதில் 20 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் அவர்க ளிடம் பிடிபடாத காளை களின் உரிமையாளர்களுக் கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, மிதிவண்டி, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. படம்: தகவல் ஊடகம்
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 756 காளைகள்
1 mins read
-

