தேவையின்றி திமுகவை விமர்சித்துள்ளார் கமல்: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: காங்கிரஸ், திமுக கூட்டணியில் மதச்சார்பற்ற அனைவரும் இணைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.
“மேலும் சில கட்சிகளைக் கூட்டணியில் இணைத்துக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்படும். திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழ கம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
“கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் போராடுவார்கள். இதற்கேற்ப காங்கிரஸ் பிரசார வியூகம் அமைக்கும்,” என்றார் கே.எஸ்.அழகிரி.
நடிகர் கமல்ஹாசன் மதச்சார்பற்ற கருத்துடையவர் என்று குறிப்பிட்ட அவர், கமல் கருத்தும் காங்கிரஸ் கட்சியின் கருத்தும் ஒன்றாக இருப்பதால், அவர் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கும் தமிழகத் தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பிரியங்கா இம்மாதம் தமிழகம் வர இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே திமுக குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்திருந் தார். இது குறித்து தமக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது என்றும், திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அழகிரி தெரிவித்துள்ளார்.
“பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்ப தற்காகவே எங்கள் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத் தேன். அப்போது திமுகவை கமல் விமர்சித்தது குறித்து எனக்குத் தெரியாது. தேவையின்றி திமு கவை விமர்சித்துள்ளார் கமல். திமுக மீதான இந்த விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குத் தான் உதவும்” என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.