கூட்டணிக் குழப்பத்தில் தவிக்கும் தேமுதிக

சென்னை: நாடாளுமன்றத் தேர் தல் நெருங்கி வரும் நிலையில், மூன்று கட்சிகளுடன் தேமுதிக தலைமை, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் தேமுதிக முன்வைத்த கோரிக்கைகளை அம்மூன்று கட்சிகளுமே ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரண மாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதாவும் உடன் இருப்பதால் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மைத்து னர் சுதீஷ் தலைமையிலான குழு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டுள்ளது.
அதிமுகவுடனான பேச்சுவார்த் தையின் போது தேமுதிக தரப்பில் ஐந்து தொகுதிகளும் தேர்தல் நிதியும் கேட்கப்பட்டதாக கூறப் படுகிறது. எனினும் இரு தொகுதி களை மட்டுமே ஒதுக்க இயலும் என அதிமுக தரப்பில் திட்டவட்ட மாகக் கூறிவிட்டதால் கூட்டணி முடிவாவதில் இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே டிடிவி.தினகரன் தரப்புடனும் சுதீஷ் குழுவினர் கூட்டணி குறித்து பேசியதாகத் தெரிகிறது. கூட்டணிக்கு விஜய காந்த்தான் தலைமை ஏற்பார் என்று சுதீஷ் கூறியதை தினகரன் தரப்பு ஏற்கவில்லை எனக் கூறப் படுகிறது.
"இதற்கிடையே பாஜக தலை மையில் மீண்டும் மூன்றாவது அணி அமைந்தால், அதில் இடம் பெற தேமுதிக விரும்புகிறது. ஆனால், கடந்த முறையைப் போலவே 14 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். கணிசமான தேர்தல் நிதி தர வேண்டும் என தேமுதிக முன்வைத்த கோரிக்கை களை பாஜக ஏற்கவில்லை.
"இந்நிலையில் அதிமுகவுட னான கூட்டணி உறுதியாகும் கட்டத்தை நெருங்கி இருப்பதால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக பாஜக நிறுத்தி வைத்துள்ளது. மூன்று கட்சிகளிடம் இருந்தும் இதுவரை சாதகமான பதில் ஏதும் கிடைக்காததால் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் தேமுதிக தடுமாறுகிறது," என தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!