ஸ்டாலின்: மோடி அரசு அல்ல, மோசடி அரசு

சேலம்: அடித்தட்டு மக்கள் குறித்து தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு கவலை இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அருந்ததியர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது எனக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலை மன தில் வைத்தே விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் தருவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது என்றும், இது வாக்களிக்க அளிக்கப்படும் லஞ்சம் என்றும் ஸ்டாலின் சாடினார்.
“பொருளாதாரத்தில் பின்தங் கிய மக்களுக்குச் சலுகை அளிக்க லாம். ஆனால் உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதை ஒருபோதும் ஏற்க இயலாது.
“தற்போது மத்தியில் நடப்பது மோடி அரசு அல்ல. அது மோசடி அரசாகும். ஏனெனில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் அப் படி எதுவும் நடக்கவில்லை,” என் றார் ஸ்டாலின்.
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட் டிய அவர், இதன் காரணமாகவே விவசாயிகள் டெல்லியில் திரண்டு அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதாகவும் இது தேசத் துக்கே அவமானம் என்றும் தெரிவித்தார்.
“ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது சகோ தரர் தனபால் குற்றம்சாட்டி வருகிறார். 
“இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. எனவே அதிமுக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என்றார் மு.க. ஸ்டாலின்.