ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு என்கிறார் தினகரன்

விழுப்புரம்:  நடப்பு அதிமுக ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வின்போது பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி வைக் கும் கட்சிகள் தேர்தலில் வைப்புத் தொகையை இழக்கும் அளவுக்கு கடும் தோல்வியைச் சந்திக்க நேரும் எனக் குறிப்பிட்டார்.
“18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனி னும் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்க ஏதுவாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறும்.
“இவற்றுள் 8 தொகுதிகளில் பழனிசாமி அணி வெற்றி பெற முடியவில்லை எனில் இந்த ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்து விடும். அதை நெருங்கி வருகி றது,” என்றார் தினகரன்.
இன்றைய ஆட்சியாளர்களால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்ட அவர், அந்த அள வுக்கு நடப்பு அதிமுக ஆட்சி மீது தமிழக மக்கள் வெகுவாக கோபமும் வெறுப்பும் கொண்டி ருப்பதாகத் தெரிவித்தார்.