மோடியின் ‘தென்னிந்திய இலக்கு’  தொடங்கியது: தமிழகத்துக்கு பல திட்டங்கள்

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘தென்னிந்திய இலக்கு’ என்ற தமது திட்டத்தை நேற்று பரபரப்பாகத் தொடங்கினார். 
அந்தத் திட்டத்தின் முதல் அங்கமாக அவர் ஆந்திராவில் குண்டூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசினார். அடுத்ததாக தமிழகத்திற்கு வருகை தந்த திரு மோடி, திருப்பூர் மாவட்டத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் கலப்பு மருந்து போல் உள்ள எதிர்க்கட் சிகள் கூட்டணியை ஒருபோதும் மக்கள் விரும்பமாட்டார்கள் என்று குறிப்பிட்டார். 
தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களில் ஒருவ ரான காமராஜர் விரும்பிய ஊழலற்ற ஆட்சியை பாஜக தந்து கொண்டு இருக்கிறது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். 
காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாகக் குறை கூறினார்.
சமூக நீதிக்கான கட்சி பாஜக தான் என்றார் திரு மோடி. 
ஐந்து ஏக்கருக்கும் குறைந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 கொடுக்கப் படும் என்று கூறிய அவர், விவ சாயிகள் நலனுக்கான புதிய திட்டத்தில் 10 ஆண்டுகளில் ரூ. 7 கோடியே 50 லட்சம் பணம் விவ சாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும் என்றார்.
 முன்னனதாக திரு மோடி திருப்பூரில் நடந்த அரசு விழாவில் ஏராளமான நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார். காணெளி மூலம் பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்களில் சென்னை டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரே ரயில் பேக்குவரத்து, சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனை ஆகியவை முக்கியமானவை. 
திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை, சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்கப்பணிகள், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் துறைமுக முனையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ஆந்திரப் பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மீறி குண்டூரில் பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய மோடி, ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடுவைக் கடுமையாகக் குறை கூறினார்.  
தமிழகத்திலும் மோடிக்கு எதிராக மதிமுக தலைவர் வைகோ தலைமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.