‘உறுப்பினர்களே இல்லாத கட்சியாக இருப்பினும் மிரட்ட முடியாது’

சென்னை: அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து மறைமுக பேச்சு நடந்து வருவதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சிறிய கட்சியோ, பெரிய கட்சியோ யாரையும் மிரட்டி கூட்டணி அமைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைமை அதிமுகவை மிரட்டுவதாகவும், அதன் காரணமாக பாஜவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயாராகி விட்டதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், உறுப்பினர்களே இல்லாத கட்சியாக இருந்தாலும் மிரட்டி கூட்டணி வைக்க முடியாது என்றார்.