காலணிக்குள் கடத்தல் தங்கம்

சென்னை: சறுக்கு விளையாட்டுக்குப் பயன்படும் காலணியில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தவர் சென்னை விமான நிலை 
யத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். நேற்று முன்
தினம் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அந்த இளைஞர் பயணம் மேற்கொண்டார். சந்தேகத்தின் பேரில் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்
போது அவரது பெட்டியில் இருந்த சறுக்கு விளையாட்டுக் காலணி சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதையடுத்து கால ணிகளைப் பிரித்துப் பார்த்த போது அதற்குள்ளும் சக்கரங்களி லும் தங்கச் சங்கிலி, உருளை வடிவ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதலான 225 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.