போலி ஏஎடிஎம் தயாரித்து பண மோசடி

சென்னை: போலி ஏடிஎம் அட்டை தயாரித்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இருவரை சென்னையில் வைத்து கொல்கத்தா போலிசார் கைது செய்தனர். இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேரந்த்வர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சென்னையில் தங்கி இருந்து ஏடிஎம் அட்டை மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை இரவு சென்னை வந்த கொல்கத்தா போலிசார், திருவல்லிக்கேணி பகுதியில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள தங்குவிடுதி ஒன்றில் புகுந்து அங்கே பதுங்கி இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து 25 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், 21 போலி ஏடிஎம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
எனினும் மூவரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவருக்கு வலைவீசப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி விவகாரம் குறித்து சென்னை போலிசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி கும்பலைச் சேர்ந்த வேறு யாரேனும் சென்னையில் பதுங்கி இருக்க வாய்ப்புள் ளதா எனும் கோணத்தில் விசாரணை நடக்கிறது.