நெடுமாறன்: விவசாயிகள் குமுறுவர்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திருவாரூரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடாவிட்டால் காவிரி டெல்டா பகுதி முழுவதும் உள்ள விவசாயிகள் குமுறி எழுவார்கள் என்றார்.