மூளையைக் காணோம் என்ற புகாரால் போலிசார் குழப்பம்

கோவை: தனது மூளை காணா மல் போய்விட்டதாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்த ஆடவரால் கோவையில் குழப்பம் நிலவியது.
நேற்று முன்தினம் காலை ஹரிகிருஷ்ண மூர்த்தி என்ற 55 வயது மதிக்கத்தக்க ஆடவர், கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்குள்ள வரவேற்பாளரிடம் அவர் மனு ஒன்றை அளித்தார்.
இதையடுத்து அங்கிருந்த போலிசார் அவரது புகார் குறித்து விவரம் கேட்டனர். அதற்கு ஆணையரிடம் மட்டுமே விவரம் தெரிவிக்க முடியும் என்றும், மற்றவர்களிடம் பேச விருப்பம் இல்லை என்றும் அவர் திட்டவட்ட மாகக் கூறினார்.
அதிகாரிகள் அதற்கு அனு மதி மறுத்த போது, திடீரென ஆணையரின் அறையை நோக்கி ஓடத் துவங்கினார் ஹரிகிருஷ்ண மூர்த்தி. அதிர்ந்துபோன போலி சார், அவரை விரட்டிப் பிடித்து விசாரணையை தீவிரமாக்கினர்.
அப்போது தனது மூளையைக் காணவில்லை என்றும், யாரோ தம்மை ஏமாற்றி அதை திருடி விட்டதாகவும் கூறினார் ஹரி. மேலும் தமது மூளையை வைத்து யாரோ சதி செய்வதாகவும், தம்மால் எதையுமே யோசிக்க முடியவில்லை என்றும் அவர் புலம்பலுடன் தெரிவித்தார்.
எனவே காவல் ஆணையரைச் சந்தித்து புகார் தர வேண்டும் என்றும் அவர் கூறியதைய டுத்து, அவரிடம் இருந்த சில கோப்புகளை போலிசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்தது. 
இதன் பின்னர் அவரது முகவரியைக் கண்டுபிடித்து வீட் டுக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.