சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக் கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூவரும் முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ஆதர வாளர்கள் தரப்பில் உற்சாகம் நிலவுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி 15ஆம் தேதி அன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக் கப்பட்டனர். சசிகலாவும் இளவரசி யும் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பெண்களுக்கான பகுதியில் அடைக்கப்பட்ட நிலையில், இருவ ரும் சிறைச்சாலை விதிகளை மீறி நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது.
சிறையில் பல்வேறு சலுகை களைப் பெறுவதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு சசிகலா பெருந் தொகையை லஞ்சமாகக் கொடுத்த தாக கர்நாடகா சிறைத்துறை உயர திகாரி ரூபா புகார் எழுப்பினார். 
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடகா அரசு உத்தரவிட் டது. எனினும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா தண்ட னைக்காலம் முடியும் முன்பே விடு தலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி, தண்டனை பெற்ற வர்கள் மூன்றில் இரண்டு பங்கு தண்டனைக் காலத்தை வேறு எந்தத் தவறும் செய்யாமல் சிறை யில் கழித்துவிட்டால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய இடம் உள்ளது.
வேறு புகார்களின் பேரில் சசிகலா மீது இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சொத்துக்குவிப்பு வழக் கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள அவர், மூன்று ஆண்டு சிறைவாசம் அனுபவித்த பிறகு விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இல்லையெனில் 2021ஆம் ஆண்டு வரை அவர் சிறையில் இருக்க நேரிடும்.