நிலநடுக்கம், நில அதிர்வால் சென்னையில் பரபரப்பு

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதி களில் நேற்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 
எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. சென்னை யில் இருந்து 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.1ஆக பதிவாகி உள்ளது. 
எனினும் ஆழிப்பேரலை எச்ச ரிக்கை விடுக்க அவசியம் ஏற்பட வில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்னை அடையாறு, டைடல் பூங்கா, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் நில அதிர்வு நன்கு உணரப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலர் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகப் பதிவிட்டிருந்தனர்.