சுடச் சுடச் செய்திகள்

பாஜக-அதிமுக கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதி

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துக் களமிறங்குவது கிட் டத்தட்ட உறுதியாகிவிட்டது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில வாரங்களுக்குமுன் பாஜக வுடன் கூட்டணி வைக்க அதிமுக தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவிப் பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அரசியல் அரங்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதற்கு முன்னர் கூட்டணி உறுதியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.  அன்றைய நாளில் கன்னியாகுமரியில் நடக்கவிருக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசவிருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யகக் கூட்டணி அரசு தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்றும் அதிமுக பேச்சாளர் சி.பொன்னையன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
அதோடு, மக்களவை துணை சபாநாயகரும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பி துரை பாஜக எதிர்ப்பு நிலையைக் கையாண்டு வருகிறார். அண்மை யில் தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
“மக்கள் நலனில் உண்மை யிலேயே அக்கறை இருந்திருந்தால் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு பல்வேறு நலத் திட் டங்களை அறிவித்திருக்க முடியும். ஆனால், பொதுத் தேர்தலை மைய மாக வைத்தே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பல திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது வரவுசெலவுத் திட்ட அறிக்கை அல்ல, பாஜகவின் தேர்தல் அறிக்கை,” என்று தம்பிதுரை சாடியிருந்தார்.
ஆனால், தமிழகத்தில் எப்படி யேனும் காலூன்றத் திட்டமிடும் பாஜக, கடந்த ஓராண்டாகவே அதிமுகவுடன் கூட்டணி தொடர் பாகப் பேசி வருவதாகக் கூறப்பட் டது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இறந்தபின் வலுவிழந்து விட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், தொண்டர்கள் விரும்பா விடினும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுவிட்டதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறு கின்றனர்.