திருப்பதி லட்டுக்கு தமிழக நெய்

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு தயாரிக்க 15 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக   23 கோடி ரூபாய் மதிப்புள்ள நெய் விற்பனை செய்ய ‘ஆவின்’ நிறுவனம் ஒப்பந்தக் குத்தகை பெற்றுள்ளது. 
ஆவின் நிறுவனம் தினமும் சராசரியாக 32 லட்சம் லிட்டர் பாலை கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழு மலையான் கோயிலில் லட்டு தயாரிக்க ‘ஆவின்’ நெய் விற்பனை செய்யப்பட வுள்ளது. ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் செய்ய 7.24 லட்சம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் 2018 அக்டோபரில் ஒப்பந்தக் குத்தகையை வெளியிட்டது. இதில் சேலம், ஈரோடு ஆவின் ஒன்றியங்கள் பங்கேற்றன. நெய்யின் தரம், விலை அடிப்படையில் ‘ஆவின்’ தேர்வு செய்யப்பட்டது.