அன்பர் தினம்; ஓசூரிலிருந்து 2.5 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி

ஒசூர்: அன்பர் தினத்தை முன்னிட்டு தமிழகத்திலிருக்கும் ஒசூரில் இருந்து சுமார் 2.5 கோடி ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட ஒரு கோடி மலர்கள் அதிகமாக இம்முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். துபாய், குவைத், ஆஸ்திரேலியா, லெபனான், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.