நளினி, முருகனுக்கு சலுகைகள் ரத்து

வேலூர்: மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் நளினி, முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் முடிவை தமிழக ஆளுநர் ஏற்க வலியுறுத்தி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன் கடந்த 2ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வேலூர் பெண்கள் சிறையில் முருகனின் மனைவி நளினியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் சிறை விதிகளை மீறி உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகனுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.