நீடிக்கிறது முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால் அதிருப்தி அடைந்துள்ள ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் முருகனும் நளினியும்
வேலூர் சிறையில் தங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர். முருகன் தொடர்ந்து 7ஆவது நாளாக உண்ணா விரதம் இருந்ததால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல அவரது மனைவி நளினியும் கடந்த 9ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.