சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

சென்னை: மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தன் மனைவியுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த். அங்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என்றும் முழு உடல் நலத்துடன் 16ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் அவர் சென்னை திரும்ப உள்ளார் என்றும் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.